Fact Check: குடியரசு தின விழாவின் போது நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் வெளியிடப்பட்டதா? உண்மை என்ன

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவம் போதித்த ரூபாய் 500 இந்திய அரசால் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

By Newsmeter Network
Published on : 5 Feb 2026 2:11 AM IST

Fact Check: குடியரசு தின விழாவின் போது நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் வெளியிடப்பட்டதா? உண்மை என்ன
Claim:சுபாஷ் சந்திர போஸின் படம் இடம் பெற்ற புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டதாகப் பரவும் செய்திகள்
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

சமீபத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் (Archive) பரவி வருகிறது.


Fact check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய முதலில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேதாஜியின் படம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது மத்திய அரசோ அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. மேலும், இது போன்ற முக்கிய அறிவிப்புகள் ஏதும் நம்பகமான செய்தி ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து வைரலாகும் புகைப்படத்தில் உள்ள ‘Tamil Cinema Fans Channel’ என்ற பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் ஆய்வு செய்தபோது, அப்புகைப்படத்தை அவர்களே முதலில் பதிவேற்றியதும், அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று அவர்களே விளக்கமளித்துள்ளதும் உறுதியானது.


இதுமட்டுமின்றி, hivemoderation இணையதளத்தில் மூலம் அந்தப் படத்தை ஆய்வு செய்தபோது, 99.9% அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று உறுதிபடுத்தியது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் வைரலாகும் 500 ரூபாய் நோட்டு புகைப்படம் போலியானது என்றும், பொதுமக்களிடையே குழப்பத்தை விளைவிக்கக்கூடிய தவறான தகவல் இதுவென்றும் நியூஸ் மீட்டர் தமிழ் சந்தேகமின்றி நிரூபித்துள்ளது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
Next Story