சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளை பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஆய்வு செய்தார்.
இந்நிலையில், கம்யூட்டரை ஆன் செய்யாமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்வதாகக் கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 30ஆம் தேதி காணொலி பதிவிட்டுள்ளார். அதில் “பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிட்வா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்போடு இருப்போம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்காணொலியில், அங்குள்ள கம்யூட்டர்களில் அவர் ஆய்வு செய்வதைக் காண முடிகிறது. மேலும் அதன் 02:32 முதல் 02:36 வரையிலான பகுதியில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பான காணொலி காட்சிகள் உள்ளன. அதில் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் கம்யூட்டர் இயக்கத்தில் இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.
Hive Moderation ஆய்வு முடிவு
மேலும் வைரலாகும் காணொலியை Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தியில் வைரலாகும் காணொலி 87.9% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கம்யூட்டரை ஆன் செய்யாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதாகப் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.