பிரபல திரைப்பட கலைஞர் பிரகாஷ் ராஜ் கும்ப மேளாவில் புனித நீராடியதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அரசியல் ரீதியாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதால் இந்த புகைப்படம் அதிகமாக பரப்பப்படுகிறது.
ஒரு பிரபலமான மத நிகழ்வில் பிரகாஷ் ராஜ் போன்ற தோற்றம் கொண்டவர் புனித நீராடுவதாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
பிரபலமான சமூக வலைதளமான X தளத்தில் பயனர் ஒருவர் ‘கடவுள் நம்பிக்கை இல்லாத இந்து விரோத பிரகாஷ் ராஜ், கும்ப மேளாவை அசுத்தப்படுத்தியுள்ளார். இப்போது தான் உண்மையான மாசுபடுதல் என்ன என்பதை அறிந்து கொண்டேன்’ என பதிவிட்டுள்ளார். (Archive)
இது போன்ற மேலும் பதிவுகள் உள்ளன. (Archive)
Fact Check:
Newsmeter ஆய்வில் இந்த புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டது. இது AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடிகிறது.
ரிவர்ஸ் இமேஜ் தேடல் நடத்திய போது, ஏசியாநெட் சுவர்னா நியூஸ் என்னும் கன்னட தளம் ‘கும்ப மேளாவில் புனித நீராடும் பிரகாஷ் ராஜ்?, வைரலாகும் AI தொழில் நுட்ப புகைப்படம்’ என்ற தலைப்பிட்டு ஜனவரி 27, 2025 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில் பிரகாஷ் ராஜ் அவர்களின் சட்டக் குழு புகைப்படம் உண்மை அல்ல, போலியானது என தெரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் AI தொழில் நுட்பத்தின் மூலம் இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டது என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.
இதன் உண்மைத்தன்மையை மேலும் உறுதி செய்ய, AI டெடெக்சன் மென்பொருளான Hive Moderation மற்றும் SightEngine மூலம் ஆய்வு செய்யப்பட்டது. SightEngine மென்பொருள் இந்த புகைப்படம் 98% AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் Hive Moderation மென்பொருள் இது 99.9% AI தொழில் நுட்பத்தின் தயாரிப்பு எனவும் கண்டறிந்தன.
நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்து பார்ததில் அவர் கும்ப மேளாவில் கலந்து கொண்டதாக எந்த செய்தியும் பதிவிடவில்லை என்பதையும் கண்டறிய முடிந்தது.
ஆக, வைரலாகும் புகைப்படம் AI தொழில் நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடிகிறது.