ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது வலிமையை காட்டுவதற்காக பேரணி நடத்துவது வழக்கம். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவோடு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பேரணியில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு கடைசியாக நீதிமன்ற அனுமதியோடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
பரவி வரும் இத்தகவல் தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. அக்காணொலி மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் நகரில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பெருமளவில் பேரணி நடத்தியதாகக் கூறும் எந்தச் செய்தியும் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது நமக்கு கிடைக்கவில்லை.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது , அக்டோபர் 6 அன்று Organizer Weekly என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஊடகத்தின் X தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவின் முழுமையான பதிப்பை நாங்கள் கண்டறிந்தோம்.
அதில், “#பாருங்கள் | மத்தியப் பிரதேசத்தின் ரத்லாமில் ஒரு பிரம்மாண்டமான ஆர்எஸ்எஸ் பாதை அணிவகுப்பு நடைபெற்றது. #RSS100Years #RSS100 #RSS” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த காணொலியின் 6 நிமிடங்கள் 38 வினாடிகள் கொண்ட பதிப்பு, ‘#சங்க நூற்றாண்டு 100 ஆண்டுகள்… அணிவகுப்பு’ என்ற தலைப்புடன் அக்டோபர் 7 அன்று ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டது. அதன் கமெண்ட் பகுதியில், ஃபேஸ்புக் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது, அந்த இடம் ‘ரத்லாம், மத்தியப் பிரதேசம்’ என்று குறிப்பிட்டார்.
இந்த காணொலிக் காட்சிகளைப் பகிர்ந்த பல சமூக ஊடகப் பதிவுகளில், இந்த பேரணி மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் நகரில் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவுகளை நீங்கள் இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Amar Ujala ஊடகம் அக்டோபர் 5 அன்று வெளியிட்ட ஒரு செய்தியின்படி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நூற்றாண்டு விழாவையொட்டி, அதே நாளில் ரத்லாம் நகரில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுபட்டு அணிவகுப்பு நடத்தினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, வைரலான காணொலி மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் நகரில் உள்ள சாஸ்திரி நகர் சாலையில் படமாக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியைக் காட்டவில்லை என்று தெரிகிறது.