உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இரு ரயில்கள் விபத்துக்குள்ளாகி கிடப்பதாகவும், இவை வந்தே பாரத் ரயில்கள் எனவும் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பயனர் இதே தகவலை பகிர்ந்துள்ளார். (Archive).
நியூஸ்மீட்டர் ஆய்வில் பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
உண்மையை கண்டறிய கீ வேர்ட் சர்ச் செய்து பார்த்த போது பிப்ரவரி 5 ம் தியதி அன்று Amar Ujala தளத்தில் கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் வந்தே பாரத் ரயில் ஒரு மாடு மீது மோதியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எவரும் உயிரிழந்த்தாகவோ காயம் அடைந்ததாகவோ எந்த செய்தியும் இல்லை. வேறு ரயிலுடன் மோதியது குறித்தும் விபரம் எதுவும் இல்லை. அதே போல வைரலாகும் வீடியோ குறித்தும் குறிப்பிடப்படவில்லை. விபத்தில் சிக்கிய ரயிலும் வந்தே பாரத் போல் தோற்றமளிக்கவில்லை.
ரிவேர்ஸ் இமேஜ் சரிச் செய்த போது இதே சம்பவம் போன்று தோற்றமளிக்கும் விபத்தின் விரிவான காணொலி Associated Press தளத்தில் ஜூன் 20, 2024 அன்று ‘சிலி ரயில் விபத்தில் 2 பேர் மரணம், ஏராளமானோர் காயம்’, என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டதை அறிய முடிந்தது.
இந்த செய்தியில் சிலி நாட்டின் சண்டியாகோ நகர பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று சோதனை ரயிலுடன் நேருக்கு நேராக மோதியதில் இரண்டு பேர் மரணமடைந்த்தாகவு, ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வீடியோக்களின் ஒப்பீடு செய்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதே புகைப்படங்களுடன், விபத்து குறித்த செய்தியுடன் The Hindu செய்தி நிறுவனமும் ஜூன் 20,2024 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்திகளின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் வந்தே பாரத் ரயில்கள் லக்லோவில் விபத்திற்குள்ளானதாக பரவும் செய்தி தவறானது என நிரூபிக்க முடிகிறது.