“வெளிமாநில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டதாக” தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேச்சாளர்களாக கலந்துகொண்டிருந்த இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காணொலியோடு, சமூக வலைத்தளத்தில் (Archive) தகவல் ஒன்று பரப்பப்படுகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி இருப்பவர் திமுக நிர்வாகி இல்லை என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொளியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Loksatta என்ற மராத்தி செய்தித்தளத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், ’YO YO TV என்ற தெலுங்கு செய்தித்தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த துண்டுகளைக் கொண்டு அவர்கள் திமுக நிர்வாகிகள் இல்லை என்று தெரியவந்தது.
இதே செய்தியை ABP நாடு ஊடகமும் வெளியிட்டுள்ளது. அதில், “தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பீகார் மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாக்குத் திருட்டே காரணம் என்று காங்கிரஸ் பேச்சாளர் கூறினார். பாஜக தரப்பில் பேசிய நபர் இதனை மறுத்து ’நீதி வென்றது’ என்று கூறியதும் காங்கிரஸ் பேச்சாளர் மேசை மீது ஓங்கி அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக பேச்சாளர்கள் ஒருவரை தாக்கிக்கொள்கிறார்கள்” குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில், வைரலாகும் காணொலியில் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்வது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது.