தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளனர். மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட வடிவம் போல் நிற்கும் புகைப்படத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
இந்தப் புகைப்படத்தில் உள்ள வடிவம் பார்ப்பதற்கு விசில் சின்னம் போல் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமே தார்மீக அடிப்படையில் தவெக கட்சியின் சின்னத்திற்கு விளம்பரம் தேடித்தருவதாகவும் அக்கட்சியின் தொண்டர்கள் பலவாறாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் புகைப்படத்தில் இருப்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.
வைரலாகும் புகைப்படத்தை ’Reverse Image Search’ மூலமாக இணையத்தில் தேடியபோது, ’தமிழ்நாடு முதன்மை தேர்தல் அதிகாரி’யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் புகைப்படத்தைக் காணமுடிந்தது.
தேர்தல் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வகையிலும், வருகின்றன 2026 சட்டமன்றத்தில் தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவு என்ற இலக்கை முன்வைத்தும் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் சார்பாக இந்த ’Human Formation’ நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ‘Chennai Online’ என்ற வலைத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என 8,662 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்கள் பல்வேறு சின்னங்களில் ஒழுங்கமைத்து நின்று தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, வைரலாகும் புகைப்படத்தில் உள்ள சின்னம் விசில் சின்னம் இல்லை. அது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.