“எரிமலை காரணமாக இருள் சூழும் இந்தியா. 10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை. இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் இந்திய வானிலை ஆய்வு மையம்” என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்தபோது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Intel Net என்ற எக்ஸ் தளத்தில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி, “இந்தோனேசியாவில் மவுண்ட் சிமேரு வெடித்து, அதன் சரிவுகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பைரோகிளாஸ்டிக் பாய்ச்சல்களை அனுப்புகிறது. அதிகாரிகள் எச்சரிக்கை அறிவித்து, அருகிலுள்ள மக்களை வெளியேறுமாறு வலியுறுத்துகின்றனர்” என்று எக்ஸ் பதிவு பதிவிடப்பட்டிருந்தது.
மேலும், தொடர்ந்து தேடுகையில் Westernpacificweather.com என்ற ஃபேஸ்புக் தளத்தில் வைரலாகும் அதே காணொலியின் குறிப்பிட்ட பகுதியின் புகைப்படத்துடன் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்தது என்று அதே நவம்பர் 19ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இதே எரிமலை வெடித்ததாக BBC ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவிற்குள் வரும் சாம்பல் புகை என்று வைரலாகும் காணொலி உண்மையில் இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்தபோது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.