உலகில் பல்வேறு மதங்கள் இருக்க கடவுளுக்கு எதிராக இருக்கும் சாத்தானை தனது கடவுளாக ஏற்றுக்கொண்டு சாத்தானை கும்பிடும் சாத்தானிய மதமும் உள்ளது. கேரளாவில் சாத்தானை கும்பிடுபவர்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், “சாத்தான் சபை வீடியோ. எச்சரிக்கை தமிழ்நாட்டில் பல இடங்களில் ரகசியமாக ஆரம்பம், இயேசுவின் வருகையின் அடையாளலங்களில் ஒன்று” என்ற தகவலுடன் சாத்தான் வழிபாடு தொடர்பான காணொலி கசிந்தது என்ற தகவல்
சமூக வலைதளங்களில் (
Archive) வைரலாகி வருகிறது.
Fact-check
நியூஸ்மீட்டர் ஆய்வில் காணொலி கொலம்பியாவில் உள்ள லூசிஃபர் கோயில் எனப்படும் சாத்தான் சபையில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, VICTOR DAMIAN ROZO என்பவர் Vimeoவில் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற உட்புறத்தைக் கொண்ட இடத்தின் காணொலியை பதிவிட்டிருந்தார்.
மேலும், கொலம்பியா லூசிஃபர் கோயில் குறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது Vice ஊடகம். அதன்படி, முன்னாள் காவலரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான விக்டர் டாமியன் ரோஸோ வில்லரேல் (அவரது உண்மையான பெயர் விக்டர் லண்டோனோ வில்லேகாஸ்) கொலம்பியவின் க்விண்டியோவில் சாத்தானியக் கோவிலைக் கட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தமிழ்நாட்டில் சாத்தானிய வழிபாட்டு சபை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக லைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அதில் காண்பிக்கப்படும் காணொலி உண்மையில் கொலம்பியாவில் உள்ள லூசிஃபர் கோயில் எனும் சாத்தான் சபையைச் சேர்ந்தது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.