“அரசு அலுவலங்களில் நடக்கும் ஊழலை நேரடியாக பிரதமரிடம் புகாரளிக்க 9851145045 என்ற Hotline எண்ணை தொடங்கியுள்ளதாக” பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இவ்வாறான எந்த ஒரு ஹாட்லைன் எண்ணும் அறிவிக்கப்படவில்லை என்று தெரியவந்தது.
இது உண்மை தானா என்பதை அறிய, கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, My Republica என்ற ஊடகத்தில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “நேபாளத்தில் அமைச்சர்கள் பேரம் பேசுதல், லஞ்சம் கேட்பது, தேவையற்ற துன்புறுத்தல் அல்லது அரசு அதிகாரிகளின் அவமரியாதையான நடத்தை உள்ளிட்ட ஏதேனும் தவறான நடத்தை குறித்து 9851145045 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று கேட்டு கொள்வதாக” குறிப்பிடப்பட்டிருந்தது.
Republica வெளியிட்டுள்ள செய்தி
மேலும், இதுதொடர்பாக நேபாள ஊடகமான Nepal Telecom ஊடகமும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில், நேபாள பிரதமர் அலுவலகம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்ப்பதற்காக ஹாட்லைன் எண் ஒன்றை அறிவித்துள்ளதாகவும், செப்டம்பர் 20ஆம் தேதி 9851145045 என்ற ஹாட்லைன் எண்ணை தொடங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவள்றல உறுதிபடுத்தும் விதமாக, நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின்(OPMCM)வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆராய்ந்தபோது. Hello Government என்ற பிரிவில் Viber மற்றும் WhatsAppக்கான எண் என்று வைரலாகும் அதே எண் (9851145045) குறிப்பிடப்பட்டிருந்தது.
நேபாள அரசு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஹாட்லைன் எண்
Conclusion:
நம் தேடலில் முடிவாக ஊழல் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக இந்தியாவில் எந்த ஒரு ஹாட்லைன் எண்ணும் இல்லை என்று தெரியவந்தது.