ஜியோவின் அதிரடி சலுகை என்ற அறிவிப்போடு முகேஷ் அம்பானியின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் பரப்பப்பட்டு வருகிறது. ரூ 2999-க்கு பதிலாக ரூ 399-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டிற்கு இலவச அழைப்புகளையும் தினசரி 2GB டேட்டாவும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்வதற்கான ஒரு லிங்கும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Fact Check:
இந்த விளம்பரம் போலியானது என்றும், நிதி மோசடி மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோடைக் கால சலுகைகள் என்னும் முகனூல் பக்கத்தில் தான் இந்த செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஜியோவின் அதிகாரப்பூர்வ பக்கமல்ல என்பதால் சந்தேகம் உருவானது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் ஜியோவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது போன்ற விளம்பரத்தை காண இயலவில்லை.
இதனை தொடர்ந்து இந்த செய்தியை பதிவேற்றிய முகனூல் பக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பக்கத்தில் வேறு எந்த உள்ளடக்கங்களும் கண்டறிய இயலவில்லை. அதுமட்டுமல்ல, இந்த பக்கம் வேறு ஒரு பெயரில் 2023 அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது என்றும், இந்த செய்தியை பதிவேற்றம் செய்த இரு தினங்களுக்கு முன்னர், அதாவது 2024 ஜூலை 11 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதும் அறிய நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து பகிரப்பட்ட செய்தி போலியானது என்ற சந்தேகம் வலுத்தது.
பின்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட பின் பகிரப்பட்டுள்ள லிங்க் பரிசோதனை செய்யப்பட்டது. https://myyjiio.live/to/vo/index.html என்ற இணைய தளத்திற்க்கு அந்த லிங்க் பயனாளர்களை கொண்டு செல்கிறது. இது ஒரு மோசடியான தளம் என கூகுள் முன்னெச்சரிக்கை செய்கிறது.
தொடர்ந்து நடத்திய சோதனையில் இது ஜியோவின் அதிகாரப்பூர்வ இனையதளத்தோடு எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது. https://www.jio.com/ என்ற ஜியோவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த சலுகைகள் பரிசோதனை செய்யப்பட்டது. ப்ரீபெய்ட் சலுகைகள் பட்டியலில் ரூ 399-க்கான சலுகைகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
பின்னர் உள்ளுர் சில்லறை நிறுவனங்களில் விசாரணை செய்யப்பட்டது. இது போன்ற ஒரு சலுகை இல்லை என்பதை அவர்களும் தெளிவாக்கினர்.
அதை தொடர்ந்து இணைய பாதுகாப்பு வல்லுனர்களுடன் கலந்துரையாடியதில் இது பொருளாதார மோசடிக்காக உருவாக்கப்பட்ட தளம் என்பதை உறுதி செய்தனர். இந்த தளத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முயலுபவர்களின் அலைபேசி எண்ணும் ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தும் இணைய வழி பணபரிவர்த்தனைகளும் மோசடியாளர்களுக்கு பகிரப்படும் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.
Conclusion:
ஜியோவின் சிறப்பு சலுகையாக ரூ 399 க்கு ரீசாஜ் செய்தால் ஒரு வருடத்திற்க்கு இலவச அழைப்புகளும், தினசரி 2 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது என்று பகிரப்படும் செய்தி முற்றிலும் போலியானது. இது நிதி மோசடி செய்யும் உத்தியோடு போலியாக உருவாக்கப்பட்ட லிங்க் என்பதும், ஜியொ நிறுவனம் இது போன்ற ஒரு சலுகையை அறிவிக்கவில்லை என்பதும் நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.