Fact Check: துபாயில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ‘ஜெய் ஸ்ரீ கணேஷ்’ பாடல் ஒலிபரப்பப்பட்டதா? உண்மை அறியலாம்

இந்தியா பாகிஸ்தான் அணிகளிடையே சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது ஜெய் ஸ்ரீ கணேஷ் பாடல் ஒலிபரப்ப பட்டதாக பரவும் ஒரு வீடியோ

By Neelambaran A
Published on : 25 Feb 2025 4:49 PM IST

Fact Check: துபாயில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ‘ஜெய் ஸ்ரீ கணேஷ்’ பாடல் ஒலிபரப்பப்பட்டதா? உண்மை அறியலாம்
Claim:இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியின் போது ஜெய் ஸ்ரீ கணேஷ் பாடல் ஒலிபரப்பபட்டது
Fact:பரவும் தகவல் தவறு. இது இருவேறு மைதானங்களில் நடைபெற்ற காணொலிகளை இணைத்து உருவாக்கப்பட்டது

இந்தியா பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் போட்டி பிப்ரவரி 23ம் தியதி துபாயில் நடைபெற்றது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 51வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி, இந்தியாவிற்க்கு மேலும் ஒரு வெற்றியை பெற்றுத் தந்தார். பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 45 பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வெற்றியை அடைந்தது.

இந்த வெற்றி கொண்டாட்டங்களுக்கிடையே துபாய் மைதானத்தில் ஜெய் ஸ்ரீ கணேஷ் என்ற பாடல் ஒளிபரப்ப பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொளி அதிகமாக பகிரப்பட்டது.

இதில் இரண்டு வெவ்வேறு காணொளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின்விளக்குகள் ஒளிர விடப்பட்டதாக ஒன்றும், பார்வையாளர்கள் தங்கள் செல்போன்களில் டார்ட் விளக்கை ஒளிர விட்டதுமாக ஒன்றும் பரவும் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர், ‘இதை விட ஊக்கமளிக்கும் ஒரு காட்சியை வேறு எங்கும் காண முடியாது. ஜம்தா ஸ்டேடியத்தில் எல்லா ரசிகர்களும், மக்களும் கணேஷ் ஆரத்தி நடத்தினர்”. வீடியோவில் ‘பாகிஸ்தானியர்களுக்கு கண் முன்னே இந்திய அணியின் வெற்றிக்கு பின்னர் அரங்கில் கணேஷ் ஆரத்தி நிகழ்த்தப்பட்டது. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது’, என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. (Archive)


வேறொரு இன்ஸ்டாகிராம் கணக்குல் இருந்தும் இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது. சட்ட விரோத பயன்பாட்டிற்காக அக்காணொளி டெலிட் செய்யப்படும் முன்னர்2.9 மில்லியன் பார்வைகளையும், எட்டாயிரத்திற்க்கும் அதிகமான கமெண்டுகளையும்,, 472 பகிர்வுகளையும் பெற்றிருந்தது.

மேலும், இதே போன்ற பதிவுகளை இங்கே காணலாம். (பதிவு1, பதிவு2) (Archive1, Archive2).

Fact Check:

நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் இது தவறு என கண்டறிய முடிந்தது. காணொளியில் காணப்படுபவை இரண்டு வெவ்வேறு காணொளிகள் என்பதும், இருவேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற்றது என்பதும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சம்பந்தம் இல்லாதது என்பதும் கண்டறிய முடிந்தது.

காணோளியில் இடம்பெற்றிருந்த கமெண்டுகளை ஆய்வு செய்யும் போது அதில், sachintd43 என்ற பயனர் இவை தான் பதிவு செய்த இரு வேறு காணொளிகளை இணைத்து உருவாக்கப்பட்டது என்றும் அவை தனது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

சச்சின் தேசாய் என்ற பெயர் கொண்ட பதிவர் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டது மும்பை வாங்கடே மைதானத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது எனவும், ரசிகர்கள் தங்கள் மொபைல் டார்ச்சுகளை ஒளிரவிட்ட நிகழ்வு இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியின் போது எனவும் தெளிவு படுத்தியுள்ளார்.

முதல் காணொளி

அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்த போது ஜெய் ஸ்ரீ கணேஷ் பாடலுடன் மின்னொளி காட்சிகள் ஜனவரி 19, 2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் முழு வீடியோவில் பயனரும் தனது கேமராவுடன் பங்கெடுத்ததை காண முடிந்தது.

வீடியோவின் தலைப்பாக, “சிறப்பான நிகழ்வு, வாங்கடேவை விட சிறந்த இடம் வேறெதுவும் இருக்க முடியாது”, என குறிப்பிடப்பட்டுள்ளது. பரவும் காணொளியின் முதற்பகுதி இதுவே என்பதும் அறிய முடிகிறது.



இதனை உறுதி செய்ய, கீ வேர்ட் தேடல் நடத்திய போது வாங்கடே மைதான கொண்டாட்டங்களை காண முடிந்தது. (பதிவு1, பதிவு2).

ஜனவரி 19, 2025 அன்று Cric-it by Hindustan Times, ‘Wankhede@ 50: Rohit eyes another ICC title celebration’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது காணொளி:

அதே பயனரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிப்ரவரி 13, 2025 அன்று ‘அகமதாபாதில் மா துஜே சலாம். எந்த மைதானத்தில் இப்பாடல் ஒலிபரப்பினாலும் அது ஒரு ஆனந்தமான நிகழ்வு தான்’ பதிவிட்டுள்ளார். மேலும் மா துஜே சலாம் பாடல் போட்டி நடைபெறும் போது ஒலிபரப்ப பட்டதையும் காண முடிகிறது.

இந்த காணொளியில் மைதானத்தில் பெரிய திரையில் இங்கிலாந்து 175/8, 30.3 ஓவர்கள் என பதியப்பட்டுள்ளது, இது இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டி எனவும் பதிவர் தகவல் இணைத்துள்ளார்.


மேலும் இந்த தகவலை உறுதி செய்ய, live commentary of India vs England third ODI at Ahmedabad at 30.3 overs என கீ வேட்ர் சர்ச் செய்து பார்த்தோம். பரவும் காணொளியில் உள்ளதை போல 175/8 என்பதை உறுதி செய்ய முடிந்தது.





பதிவரான சச்சின் அவர்களை தொடர்பு கொண்ட போது, அவரும் இந்த செய்திகளை உறுதி செய்தார்.

இந்த தகவல்கள் அடிப்படையில் பரவும் காணொளி தவறானது என்றும், இரு வேறு காணொளிகளின் தொகுப்பு என்பதும் நிரூபணமாகிறது.



Claim Review:பிப்ரவரி 23, 2025 அன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி முடிந்த உடன் ஜெய் ஸ்ரீ கணேஷ் பாடல் மைதானத்தில் ஒலிபரப்ப பட்டது
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Instagram
Claim Fact Check:False
Fact:பரவும் தகவல் தவறு. இது இருவேறு மைதானங்களில் நடைபெற்ற காணொலிகளை இணைத்து உருவாக்கப்பட்டது
Next Story