Fact Check: ரூபாய் 30,000 பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக பரவும் லிங்க? உண்மை என்ன

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ரூபாய் 30,000 பரிசாக வழங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் இணைய லிங்குடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

By Newsmeter Network
Published on : 12 Jan 2026 2:37 AM IST

Fact Check: ரூபாய் 30,000 பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக பரவும் லிங்க? உண்மை என்ன
Claim:பொங்கல் பரிசு வழங்க உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்
Fact:இத்தகவல் தவறானது‌‌. உண்மையில் இது ஒரு ஸ்பேம் லிங்

“ இது போலி என்று நினைத்தேன், ஆனால் உண்மையிலேயே எனக்கு ₹50,000 கிடைத்தது! நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் இணைய லிங்க் ஒன்று வைரலாகி வருகிறது.


Fact check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் ஸ்பாம் என்று தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்ய வைரலாகும் இணை லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, Shree Krishna Sweets கடையின் லோகோவுடன் “Sri Krishna Sweets - பொங்கல் பரிசு. கேள்வித்தாள் மூலம், நீங்கள் ₹50,000 பெற வாய்ப்பு கிடைக்கும்.” என்று குறிப்பிட்டு தொடர்ச்சியாக நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது அதில், “ஆம்”, “இல்லை” என்ற இரண்டு விருப்பங்களை கிளிக் செய்யும் இடம் இடம்பெற்றுள்ளது.


அதனை கிளிக் செய்தபின் ஒரு பக்கம் திறக்கிறது. அதில், “வாழ்த்துக்கள்! நீங்க செஞ்சது சரிதான்! நீங்க ₹50,000 ஜெயிச்சிட்டீங்க” என்று குறிப்பிட்டு எங்கள் விளம்பரங்களைப் பற்றி நீங்கள் 5 குழுக்களுக்கோ அல்லது 20 நண்பர்களுக்கோ சொல்ல வேண்டும் என்றும் முகவரியை குறிப்பிட்டால் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் பரிசுகள் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஸ்பேம் இணையதளங்கள் தான் இவ்வாறு தகவலை பலருக்கு அனுப்பக்கூறி இயங்கும், இதன் மூலம் வைரலாகும் இணைய லிங்கும் ஸ்பேம் என்று தெரியவருகிறது.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், போலி இணையதள முகவரியைப் பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தின் பெயரில் பொங்கல் பரிசுகளை அறிவித்து வருபவர்கள் மீது கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக The Hindu ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ரூபாய் 50,000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் மற்றும் இணைய லிங்க் ஸ்பேம் என்று தெரியவந்தது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. உண்மையில் இது ஒரு ஸ்பேம் லிங்
Next Story