Fact Check: அமைச்சரவை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்றாரா? வைரல் புகைப்படத்தின் பின்னணி!

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

By Newsmeter Network
Published on : 7 Feb 2026 1:48 AM IST

Fact Check: அமைச்சரவை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்றாரா? வைரல் புகைப்படத்தின் பின்னணி!
Claim:அமைச்சரவைக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்றதாகத் தெரிவிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் புகைப்படம் கடந்த 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போது அமைச்சராக இல்லாத செந்தில் பாலாஜி கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Fact-Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் பழையது என்பது தெரியவந்தது.

வைரலாகும் அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் ஆய்வு செய்தபோது அது குறித்த உண்மைகள் வெளிவந்தன. குறிப்பிட்ட அப் புகைப்படம் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 'Knowledge and News Network' உள்ளிட்ட செய்தித்தளங்களில் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

அதில், இது கடந்த ஆண்டு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற தற்போதைய அமைச்சரவைக் கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ புகைப்படங்களை தமிழக முதல்வர் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் சரிபார்த்தோம். அந்த அதிகாரப்பூர்வப் புகைப்படங்களில் செந்தில் பாலாஜி இடம்பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக அமைச்சரவைக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்றதாகப் பரப்பப்படும் புகைப்படம் 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய படம் என்பதும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் புகைப்படம் கடந்த 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
Next Story