வானத்தில் இருந்து மழை பொழிவது போல இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து பாம்புகள் பூமியில் கொட்டுகிறது இது ஆண்டவனுடைய கோபபார்வை என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் குறித்து உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, உண்மையில் இஸ்ரேலிலில் பாம்பு மழை பெய்திருந்தால் அது குறித்து, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் எந்தவொரு ஊடகங்களிலும் இது குறித்தான செய்திகள் வெளியாகியாகவில்லை.
Hive moderation ஆய்வு முடிவு
இதையடுத்து அந்த காணொலியில் பல்வேறு இடங்களில் பாம்புகள் தோன்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனால் இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால், வைரலாகும் காணொலியை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தபோது, ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, 92.4% இது AI மூலம் உருவாக்கப்பட்ட காணொலி என்பது உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, இஸ்ரேலில் பாம்பு மழை எனப் பரவும் காணொலி உண்மையல்ல அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.