காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசுவது போல் உள்ள புகைப்படத்தில், அவருக்கு பின்னால் "How to convert India into Christian nation" எனும் இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது தொடர்பான புத்தகம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நீயூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.
சோனியா காந்தி புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த்து பார்த்தபோது, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் NDTV, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான சோனியா காந்தியின் இதே புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், அந்த புகைப்படத்தில் "How to convert India into Christian nation" மற்றும் பைபிள் போன்ற புத்தகங்கள் இடம்பெறவில்லை. அதே உடை மற்றும் பேக்கிரவுண்டில் பீகார் மாநில மக்களுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய காணொலி காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனலில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி வெளியாகி உள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் சோனியா காந்திக்கு பின்னால் " How to convert India into Christian nation” என்ற தலைப்பில் புத்தகம் உள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.