இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து தாக்கியதில் ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மற்றும் உறுதிப்படுத்தின. இந்நிலையில், “நேற்று இரவு (28.2.2026)இஷாத் தொழுகை மற்றும் புனித ரமலானின் தராவீஹ் தொழுகையை தொழவைத்த அயத்துல்லா அலி கமேனி அவர்களின் வீடியோ வெளியாகி உள்ளது” என்று அயோத்துல்லா காமேணி தொழுகை வைப்பது போன்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
உண்மையில் வைரலாகும் காணொளி சமீபத்தில் எடுக்கப்பட்டது தானா என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர் சீமை சர்ச் குறைக்க உட்படுத்தியபோது, Muhibaan Editz என்ற யூடியூப் சேனலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில் ஈரானின் உச்ச தலைவர் தொழுகையை வழி நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, eghtesadnews என்ற பெர்சிய மொழி ஊடகம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “பதக்கம் வென்றவர்கள் குழு ஒன்று அயதுல்லா கமேனியைச் சந்தித்தனர். மதிய வேலையில் தலைவர் அயோத்துல்லா காமேணி தலைமையில் தொழுகை நடைபெற்றதாகவும், அதனை Channel 3 மற்றும் KHAMENEI.IR ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே செய்தியை வைரலாகும் காணொலியுடன் leaders.ir என்ற ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Presstv.ir என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, “17வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் ஈரானிய மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்” என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சமீபத்தில் ரமலான் மாதத்தின் சிறப்பு தொழுகையை அயத்துல்லா அலி கமேனி தொழவைத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் மேலும், ஒலிம்பியாட் போட்டியில் வென்ற ஈரானிய மாணவர்களுடன் அவர் தொழுததாகவும் தெரியவந்தது.