திமுக ஆட்சியில் சென்னையின் சாலையில் படுகுழி ஏற்பட்டு  வாகனங்கள் அதற்குள் விழுவதாக பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
Fact Check:
நியூஸ் நீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படங்கள் பழையது என்று தெரியவந்தது.
வைரலாகி வரும் புகைப்படங்களின் உண்மை தன்மையை கண்டறிய அதில் இருக்கும் நான்கு புகைப்படங்களையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். முதலில் மேலே இருந்த இரண்டு புகைப்படங்களை ஆய்வு செய்தபோது NDTV ஊடகம் 2017ஆம் ஆண்டு  வைரலாகும் அதே புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில்,  ஆர்டேரியல் அண்ணா சாலையில் ஏற்பட்ட படுகுழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
NDTV வெளியிட்டுள்ள செய்தி
மேலும், 35 பேருடன் பயணித்த அரசு பேருந்து மற்றும் ஒரு கார் அந்த பள்ளத்திற்குள் விழுந்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சிறிது நேரத்தில் சாலையில் ஏற்பட்ட படுகுழி சரி செய்யப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதே சம்பவத்தை மற்றொரு கோண புகைப்படத்துடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் 2017ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, கீழே இடதுபுறம் இருக்கக்கூடிய புகைப்படத்தை ஆய்வு செய்ததில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி,  சென்னை தரமணியில் உள்ள சாலையில் ஏற்பட்ட படுகுழியில் கார் ஒன்று விழுந்தது தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக The New Indian Express ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது.
The New Indian Express ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி
தொடர்ந்து, வலதுபுறத்தில் உள்ள புகைப்படத்தை ஆய்வு செய்தபோது Live Chennai என்ற இணையதளத்தில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வைரலாகும் அதே புகைப்படம் செய்தி ஒன்றில் இடம்பெற்று இருந்தது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக சென்னையில் சமீபத்தில் திமுக ஆட்சியில் சாலையில் ஏற்பட்ட படுகுழிகளால் வாகனங்கள் குழிக்குள் விழுவதாக வைரலாகும் புகைப்படம் அனைத்தும் பழையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.