”22 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 43 சதவீதத்தினர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவிற்கு வாக்களிக்க விரும்புவதாக” ‘Times of India’ செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு கூறுவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இவ்வாறான கருத்துக்கணிப்பை டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் வெளியிடவில்லை என்று தெரியவந்தது.
முதலில் வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய அது தொடர்பாக கூகுளில் கீவர் சர்ச் செய்து பார்த்தபோது டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகமோ அல்லது வேறு ஏதேனும் ஊடகமோ இவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை என்று தெரிய வந்தது.
தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தின் சமூக வலைதள பக்கங்களை தேடி பார்த்த போது, வைரலாகும் இது போன்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எதையும் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியின் படி வரும் தேர்தலில் 34 சதவீதம் பேர் விஜய்யின் தவெகவிற்கு வாக்களிக்க உள்ளதாக தவறான செய்தியும் பரவி வந்தது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக 22 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 43 சதவீதத்தினர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெகவிற்கு வாக்களிக்க விரும்புவதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அவ்வாறான தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிடவில்லை என்றும் தெரியவந்தது.