Fact Check: இந்து வாடிக்கையாளர்களுக்கு பிரியாணியுடன் கருத்தடை மாத்திரையை கலந்து விற்பதாக மத விரோதத்தை வளர்க்கும் பொய் பிரச்சாரம்

ஹோட்டல்களில் இந்துக்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்து பொய்யான பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

By Neelambaran A
Published on : 22 Feb 2025 12:43 PM IST

Fact Check: இந்து வாடிக்கையாளர்களுக்கு பிரியாணியுடன் கருத்தடை மாத்திரையை கலந்து விற்பதாக மத விரோதத்தை வளர்க்கும் பொய் பிரச்சாரம்
Claim:இந்து வாடிக்கையாளர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை கலந்து விற்கும் இஸ்லாமிய கடைகள்
Fact:பரவும் புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இது பொய்யான தகவல் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான threads தளத்தில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் ஹோட்டல்கள் இந்துக்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணியை விற்பதாக செய்தி பகிரப்பட்டுள்ளது. சுமார் 40 இஸ்லாமியர்கள் நடத்தும் ஹோட்டல்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், இந்துகளின் மக்கள் தொகையை குறைக்க இவ்வாறு செய்வதாக சமூக வலைதள பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

‘கவனம் நண்பர்களே, குஜராத், ராஜஸ்தான் மற்றும் நாட்டின் நெடுஞ்சாலைகளில் இஸ்லாமியர்கள் நடத்தும் 40 ஹோட்டல்கள் சோதனை செய்யப்பட்டதில் அவர்கள் இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை மருந்துகளை கலந்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டது’, என மத துவேஷத்தை பரப்பும் விதத்தில் பதிவிடப்பட்டுள்ளது.



Fact Check:

பதிவுகளில் காணப்படும் புகைப்படங்கள் பழையதும் ஒன்று கொண்டு சம்பந்தமில்லாததும் ஆகும். மத பிரிவினையை தூண்டும் விதமாக தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

புகைப்படம் 1:

பிஜுனூர் காவல்துறையின் எக்ஸ் கணக்கில் ஜூலை 2019 ஆம் ஆண்டு இதே புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறை ஒரு மதராசாவை சோதனை செய்து சட்டவிரோதமான ஆயுதங்களை கைப்பற்றி ஆறு நபர்களை கைது செய்தது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாவது இந்த புகைப்படம் தான்.

புகைப்படம் 2:


இலங்கை செய்தித்தாள் ஆன the daily mirror 2019 மே மாதம் இதே புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சிறப்பு படை போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகளை குழம்போ நகரில் இருந்து கைப்பற்றியதாகவும் அதன் மதிப்பு ரூபாய் 4 மில்லியன்கள் எனவும் ஒரு தந்தையின் மகனையும் கைது செய்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. வைரலாகும் புகைப்படம் இதுவே.

புகைப்படம் 3:

ஒரு youtube வீடியோவில் தமிழில் புகைப்படமாக இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ 30 பேருக்கு தம் பிரியாணி தயாரிப்பது எப்படி என விளக்குகிறது. இது ஜூலை 1 2016 பதிவேற்றம் செய்யப்பட்டு 43 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.


மேலும் இந்த நிகழ்வு சார்ந்த ஒரு புகைப்படம் முன்னரே சமூக வலைதளங்களில் பதியப்பட்டுள்ளதையும் காண முடிந்தது. ஏற்கனவே குறிப்பிட்ட படி இந்த புகைப்படம் பிஜூனூர் காவல்துறையால் நடத்தப்பட்ட மதராசா சோதனையின் போது எடுக்கப்பட்டது. காவல்துறை அலுவலர்களுடன் நடந்து வரும் இருவர் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

நான்கு புகைப்படங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதவை என்பதை நிரூபிக்க முடிகிறது.


மேலும் கோவையில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதாக 2020 ம் ஆண்டில் சமூகவலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு இருந்தன. அப்போது கோவை மாநகர காவல்துறை இது பொய்யான தகவல் என செய்தி வெளியிட்டது.

நம் தேடலில், இந்து வாடிக்கையாளர்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்து பிரியாணி விற்கும் கடைகள் என்ற பிரச்சாரம் பொய் என்பதையும், இந்த புகைப்படங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத்தவை என்பதையும் கண்டறிய முடிந்தது.



Claim Review:இந்து வாடிக்கையாளர்களுக்கு கருத்தடை மாத்திரை கலந்து பிரியாணி விற்பதாக பரவும் புகைப்படங்கள்
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Threads
Claim Fact Check:False
Fact:பரவும் புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இது பொய்யான தகவல் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
Next Story