“கர்னாடக வில் இருந்து வந்த பண்டாரம் எப்படி எழுர்ச்சி தமிழன் ஆனான்? யாராவது சிந்தித்தது உண்டா ?” என்று கொச்சையாக விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடக மாநிலம் மங்களூரு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார் என்று கூறி சமூக வளைதலங்களில் (Archive) தகலவளுடன் புகைப்படம் ஒன்று வைரளாகி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் 2001 ஆம் ஆண்டு திருமாவளவன் கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் தொகுதியில் போட்டியிட்டது தெரியவந்தது.
கர்நாடகாவில் உள்ள மங்களூர் தொகுதியில் நின்று விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் போட்டியிட்டதாக வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி திருமாவளவன் கடலூரில் உள்ள மங்களூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் என்று ஒன் இந்தியா தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது.
தொடர்ந்து, இது குறித்து தேடுகையில் India Votes என்ற இணையதளத்தில் 2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, திருமாவளவன் மங்களூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரிய வந்தது. திமுக சார்பில் போட்டியிட்டவர் 1,94,908 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார் என்று தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகாவில் உள்ள மங்களூரு தொகுதியில் போட்டியிட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும், உண்மையில் அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் என்ற தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரியவந்தது.