உத்தரப்பிரதேசத்தில் உள்ள யமுனா விரைவு சாலையில் ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி ஒருவர் சாலையில் விழுந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இந்நிகழ்வு உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது என்று கூறி பலரும் பரப்பி வருகின்றனர்.
Fact check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
பொதுவாக ஆம்புலன்ஸில் நோயாளி தூக்கிச்செல்லப்படும் போது அவருக்கு துணையாக மருத்துவ உதவியாளர்கள் அல்லது நோயாளிக்கு வேண்டியவர்கள் கண்டிப்பாக உடனிருப்பார்கள். ஆனால் வைரலாகும் காணொலியில் நோயாளியை தவிர்த்து யாரும் காணப்படவில்லை.
அதே போல் ஆம்புலன்சின் முன் பக்கத்தில் “AMBULANCE” என்ற ஆங்கில வார்த்தையை திருப்பி (Mirrored) எழுதியிருப்பார்கள். ஆனால், இந்த வாகனத்தின் பின்பக்கத்தில் ஆம்புலன்ஸ் வார்த்தையை திருப்பி எழுதியுள்ளனர். இது மேலும் சந்தேகத்தை கூட்டியது.
தொடர்ந்து, வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய அதனை Hive Moderation எனும் இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் வைரலாகும் காணொலி 97% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தது.
Hive Moderation ஆய்வு முடிவு
Conclusion:
நம் தேடலின் முடிவாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாலையில் ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி ஒருவர் கீழே விழுந்ததாக வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.