Fact Check: "நடிகர் ரஜினிகாந்த் 'துரந்தர் 2' படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாகப் பகிரப்படும் காணொலி? உண்மை அறிக

துரந்தர் 2 திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அதனை பாராட்டியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Newsmeter Network
Published on : 25 March 2026 1:23 AM IST

Fact Check: நடிகர் ரஜினிகாந்த் துரந்தர் 2 படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாகப் பகிரப்படும் காணொலி? உண்மை அறிக
Claim:சமீபத்தில் வெளியான துரந்தர் 2 திரைப்படத்தைத் திரையரங்கில் கண்டுகளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அங்கிருந்து வெளியேறும் வீடியோ சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாவது ‘வித் லவ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்ட காணொலி

இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2: ரிவெஞ்ச்’ (Dhurandhar 2: Revenge), இந்த மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார்.

​இந்நிலையில், ரஜினிகாந்த் ‘துரந்தர் 2’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியேறுவது போன்ற ஒரு காணொலி, சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.


Fact-Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி ‘வித் லவ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்ட போது எடுக்கப்பட்டது.

வைரலாகும் இந்தக் காணொலியில் ‘சென்னை டைம்ஸ்’ (Chennai Times) ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருந்ததை நாம் கவனித்தோம். அதன் அடிப்படையில் தேடியபோது, அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பிப்ரவரி 3, 2026 அன்று ஒரு காணொலி பதிவேற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.


அந்தப் பதிவில், "SuperstarRajinikanth’s first comments after watching WithLove premiere today" என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தது. மேலும், அந்தத் திரையரங்கில் ‘வித் லவ்’ திரைப்படத்தின் விளம்பரப் பதாகைகள் (Banners) இருப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது.

​‘வித் லவ்’ திரைப்படம் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படமாகும். இது தொடர்பாக சன் நியூஸ் மற்றும் தி ஃபெடரல் போன்ற ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

​Conclusion:

முடிவாக, ​‘துரந்தர் 2’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் திரும்புகிறார் எனப் பகிரப்படும் தகவல் தவறானது. சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான ‘வித் லவ்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண அவர் சென்றபோது எடுக்கப்பட்ட காணொலியே, தவறாக பகிரப்பட்டு வருகிறது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாவது ‘வித் லவ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்ட காணொலி
Next Story