Fact Check: ஈரானின் தெருக்களில் சேதமடைந்த B-2 குண்டுவீச்சு விமானம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதாகப் பரவும் வைரல் காணொலி? உண்மை அறிக

போரின் போது சுடப்பட்ட அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் ரக விமானத்தை ஈரான் தெருக்களில் இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன

By Newsmeter Network
Published on : 8 March 2026 9:23 PM IST

Fact Check: ஈரானின் தெருக்களில் சேதமடைந்த B-2 குண்டுவீச்சு விமானம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதாகப் பரவும் வைரல் காணொலி? உண்மை அறிக
Claim:ஈரானிய வீதிகள் வழியாக அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானத்தின் சிதைந்த பாகங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாகப்பட்டது

போர் ஒன்றில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் ரக குண்டுவீச்சு விமானத்தை ஈரானிய வீதிகளில் இழுத்துச் செல்வது போல் சித்தரிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது.


Fact check:

நியூஸ்மீடரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

'khanon_ka_khan' என்ற இன்ஸ்டாகிராம் பயனர், மார்ச் 5, 2026 அன்று ஒரு காணொலியை “அவர்கள் ஒரு B-2 குண்டுவீச்சு விமானத்தைக் கைப்பற்றி ஈரானிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த காணொலிவை சுமார் 2,66,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இந்த வைரல் காணொலியை உற்று நோக்கும்போது பல சந்தேகங்கள் எழுந்தன. விமானத்தின் இறக்கைகள் சாலையின் அகலத்தை விட மிகப் பெரியதாக இருந்தாலும், அது எவ்வித சிரமமுமின்றி சாலையில் எளிதாக நகர்கிறது. சுற்றியுள்ள வாகனங்களும் எவ்வித பதற்றமுமின்றி சாதாரணமாகச் செல்கின்றன. மேலும், ஒரு காட்சியில் முழுமையாக இருக்கும் விமானத்தின் முன்பகுதி, அடுத்த காட்சியிலேயே திடீரென சேதமடைந்திருப்பதைப் போல மாறுகிறது. இவையே இதுவொரு AI காணொலி என்பதற்கான வலுவான அறிகுறிகளாகும்.


இதனைத் தொழில்நுட்ப ரீதியாக உறுதி செய்ய, 'Hive Moderation' என்ற AI கண்டறியும் இணையதளத்தில் காணொலியை ஆய்வு செய்தோம். அதில், இது 99.9% செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இறுதியாக, காணொலியின் சில காட்சிகளை (Keyframes) பிரித்தெடுத்து 'Google Lens' மூலம் தேடினோம். அதில், இதே காணொலி மார்ச் 5, 2026 அன்று '@Cesariumeth' என்ற பயனரால் பதிவேற்றப்பட்டிருப்பதும், அது AI-யால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆர்ட்ஸ் என அவரே தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக ஈரானில் அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு வீதிகளில் இழுத்துச் செல்லப்படுவதாக இணையத்தில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது; அந்த வைரல் காணொலி முழுவதும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனை வடிவமாகும்.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாகப்பட்டது
Next Story