ஒரு இஸ்லாமியர், ஆவி பறக்கும் மஞ்சள் நிற சாதமும் இறைச்சித் துண்டுகளும் நிறைந்த ஒரு பாத்திரத்தில், சாக்கடை நீரைக் கொட்டுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இக்காணொலியைப் சமூக வலைதளங்களில் (Archive) பகிரும் பயனர்கள், ஒரு முஸ்லிம் நபர் சாக்கடை நீரைப் பயன்படுத்தி பிரியாணி சமைப்பதாகக் கூறுகின்றனர்.
நியூஸ்மீட்டர் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது போன்று தெரிந்தது. இதனைத்தொடர்ந்து, காணொலியை கூர்ந்து ஆராய்ந்ததில், சிலைகள் போல அசையாமல் நின்ற மக்கள், உடற்கூறியல் ரீதியாக சிதைந்த கால்கள் மற்றும் தெளிவான வரையறை இல்லாத முகங்கள் கொண்ட பச்சை நிற சட்டை அணிந்த ஒரு மனிதர் என்பது போன்ற AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலியில் இருக்கக்கூடிய சிதைவுகள் அதில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியை Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது, 89.2% இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தது. மேலும், Deepfake-O-Meterன் ஐந்து டிடெக்டர்கள், அந்தக் காணொலி முறையே 100, 98.3, 100, 99.8 மற்றும் 91.2 சதவீதம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கண்டறிந்தன.
முடிவாக, நம் தேடலில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.