தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கரூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று(அக்டோபர் 27) நடிகர் விஜய் சென்னையில் நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் இச்சந்திப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் சென்னையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Behind Talkies என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே புகைப்படம் பதிவிட்டுருந்தது. அதில் “சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை , பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த தவெக தலைவர் விஜய்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில் TVK Vijay Family என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளர் ECR சரவணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே புகைப்படத்தை சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் இருந்தவர்களுடன் நடிகர் விஜய் என்று பதிவிட்டுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்ததாக வைரலாகும் புகைப்படம் உண்மையில் சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று தெரியவந்தது.