“தேர்தலுக்குப் பிறகு பீகாரில் நடக்கும் மகா யுத்தம் எந்தச் செய்தி நிறுவனமும் வெளியிடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கானுங்களா..... ?” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
அதில், “குஜராத்தின் பொடாட் மாவட்டத்தின் ஹடாத் கிராமத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராஜு கர்படா ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தின் போது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான செய்தியை கடந்த அக்டோபர் 12ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அதிலும், இச்சம்பவம் குஜராத்தில் ராஜ்கோட்டில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் சென்றதை அடுத்து, அங்கு ஏற்பட்ட கலவரத்தின் போது எடுக்கப்பட்ட காணொலியை பீகார் சட்டசபை தேர்தல் முடிவையடுத்து அங்கு கலவரம் நடைபெறுவதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.