கரீபியன் கடல் பகுதியில் உருவாகியுள்ள மெலிசா சூறாவளி ஜமைக்கா நாட்டை தாக்கியுள்ளது. இந்நிலையில், விமானத்திலிருந்து படம் பிடிக்கப்பட்ட சூறாவளியின் மத்திய பகுதி என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Earth Impacts என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி ஆறு நாட்களுக்கு முன்பு பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அதில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் உண்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்கையில் வைரலாகும் அதே காணொலி போன்ற பல்வேறு வகையான இயற்கை சீற்றங்கள் போன்ற காணொலிகள் பதிவிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று அதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் மெலிசா சூறாவளியின் போது அதன் மையப்பகுதி விமானத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டதாக வைரலாகும் அதே காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.