காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூடிய லட்சக்கணக்கான மக்கள் என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது
Fact Check:
நியூஸ் மீட்டரில் ஆய்வில் வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ரோடு ஷோவின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சகாரன்பூரில் ரோடுஷோ சென்றபோது எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனலிலும் இதே காணொலி அதே தகவலுடன் பதிவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, இக்காணொலி உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது. மேலும், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரியவருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலின் 2024ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்ட காணொலியை, தற்போது பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்ட போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பி வருகின்றனர்.