"இந்த பஸ் நிலையம் இருப்பது உத்தரப்பிரதேசம் என்றழைக்கப்படும் புண்ணிய பூமியில். இதை ஆண்டு கொண்டிருப்பவர் ஸ்வாமி யோகி. இந்தியா பூராவும் இவரை போன்ற ஸ்வாமிகளின் காலடியில் கிடத்தினால், ராஜ்ய பரிபாலனம் மிளிர, சனாதனம் செழிக்க வாழலாம்" என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
Fact Check:
நீயூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி சீனாவில் உள்ள ரயில் நிலையம் என்று தெரியவந்தது.
காணொலியின் உண்மைத்தன்மை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, activewurld என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், இது சீனாவில் உள்ள Chongqing East அதிநவீன மற்றும் மிகவும் வேகமாக இயங்கக்கூடிய ரயில்களை உள்ளடக்கிய ரயில் நிலையம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காணொலியை iChongqing என்ற யூடியூப் சேனலும் இது சீனாவில் உள்ள ரயில் நிலையம் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.
மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக சீன வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான Mao Ning, வைரலாகும் அதே காணொலியை சீனாவில் இருக்கும் East chonning என்ற ரயில்வே நிலையத்தின் கழுகு காட்சி என்று பதிவிட்டுள்ளார். கடந்த ஜூன் 19ஆம் தேதி இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீன வெளியுறவுத்துறையின் பதிவு
Conclusion:
முடிவாக, நம் தேடலில் உத்திரபிரதேசத்தில் உள்ள பேருந்து நிலையம் என்று வைரலாகும் காணொலி உண்மையில் சீனாவில் இருக்கக்கூடிய ரயில் நிலையத்தின் காட்சிகள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.