Fact Check: போர் வீராங்கனை போல வாள் சுழற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா என பரவும் வீடியோவின் உண்மை என்ன?

டெல்லி மாநில புதிய முதல்வர் வாள் சுழற்றுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

By Neelambaran A  Published on  21 Feb 2025 1:38 PM IST
Fact Check: போர் வீராங்கனை போல வாள் சுழற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா என பரவும் வீடியோவின் உண்மை என்ன?
Claim: டெல்லி மாநில புதிய முதல்வர் வாள் சுழற்றும் வீடியோ
Fact: பரவும் தகவல் தவறு. வீடியோவில் காணப்படுவது மராத்தி மொழி நடிகை பாயல் ஜாதவ்

ல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாரதிய ஜனதா கட்சி பிப்ரவரி 19, 2025 அன்று ரேகா குப்தாவை முதல்வராக தேர்வு செய்தது. முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா பிப்ரவரி 20, 2025 அன்று முதல்வராக பதவி ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு பெண் ஆற்றுப்படுகையில் நின்று பூஜை செய்வதும் உடற்பயிற்சிகள் செய்வதும் கோலங்கள் வரைவதும் வாளை சுழற்றுவதுமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவில் காணப்படும் பெண் டெல்லி மாநிலத்தின் புதிய முதல்வர் ரேகா குப்தா என பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.

‘டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தாவான ரேகா குப்தாவின் பழைய வீடியோ. இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர். இனி எல்லாமே சரியாக இருக்கும்’, என facebook தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


Fact check:

நியூஸ் மீட்டர் ஆய்வில் இந்த தகவல் தவறு என கண்டறிய முடிந்தது. வீடியோவில் காணப்படுபவர் மராத்தி மொழி நடிகை பாயல் ஜாதவ் ஆவார்.

பகிரப்பட்டு வரும் வீடியோவின் பிரேம்களின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்த போது பிப்ரவரி 19 2025 அன்று நடிகை பாயல் ஜாதவின் instagram கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோவை காண முடிந்தது. சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு இந்த செயல்களை செய்ததாக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது instagram கணக்கில் இது போன்ற பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மராத்தி மொழி நாடகமான அபீர் குலாலில் அவர் நடித்தது உள்ளிட்ட பல வீடியோக்களை காண முடிந்தது. (வீடியோ 1, வீடியோ 2, வீடியோ 3).

The Times of India பத்திரிகை செய்தியின் படி Three of Us, Baaplok ஆகிய படங்களில் சமீபத்தில் அவர் நடித்துள்ளதாகவும், IMDb தளத்தில் Parees, Goal Maal, Manvat Murders ஆகிய படங்களிலும் அவர் பல வேடங்களில் நடித்ததாக காண முடிகிறது.


தேடலின் முடிவில், வைரலாகும் வீடியோவில் காணப்படுவது டெல்லி முதல்வர் ரேகா குப்தா அல்ல என்றும், அவர் மராத்தி மொழி நடிகை பாயல் ஜாதவ் எனவும் கண்டறிய முடிந்தது.




Claim Review:டெல்லி மாநில புதிய முதல்வர் பூஜை செய்வது, உடற்பயிற்சி செய்வது, வாள் சுழற்றுவது என கூறி ஒரு காணொலி வைரலாகி வருகிறது.
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:பரவும் தகவல் தவறு. வீடியோவில் காணப்படுவது மராத்தி மொழி நடிகை பாயல் ஜாதவ்
Next Story