நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் ஓவியம் கொண்ட சுவர் இடிக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியத்தின் நிறங்களும் த.வெ.க கொடியின் நிறத்தைப் போல இருப்பதை காண முடிகிறது. இப்தார் விருந்தில் விஜய் கலந்து கொண்ட பின் அலுவலகம் இடிக்கப்பட்டதாக அந்த காணொளி பரப்பப் படுகிறது.
இப்தார் விருந்தில் விஜய் கலந்து கொண்ட பின்னர் ஒரு விவாதமும் எழுந்தது குறிப்பிடதக்கது. இஸ்லாம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை புண்படுத்தியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
நடிகர் விஜயை அண்ணன் என அடையாளப்படுத்தி, முகனூல் பயனாளர் ஒருவர், ‘ அண்ணன் எங்கோ பிரார்த்தனை செய்ய சென்றது மட்டும் நினைவில் உள்ளது ‘ என அந்த காணொளியை பகிர்ந்துள்ளார். (Archive)
நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் பரவும் காணொளி தவறானது என தெரிய வந்தது. விஜய் இப்தார் விருந்தில் கலந்து கொண்டதற்கும் கட்டிடம் இடிக்கப்பட்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் கீ பிரேம்களை பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது இதே காணொளி பிப்ரவரி 19, 2025 அன்று thalapathy_tvk_0622’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டதை காண முடிந்தது.
‘enddrum_thalapathy_vijay_fans’ என்னும் மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கிலும் இந்த காணொளி பிப்ரவரி 20,2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரமலான் நோன்பு மார்ச் 1-2 தியதிகளில் துவங்கியது, நடிகர் விஜய் இப்தார் விருந்து மார்ச் 7 அன்று நடைபெற்றது. ஆகையால் பரவும் காணொளி இப்தார் துவங்கும் முன்னரே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகிறது.
Kumudam News 24*7 தங்களது youtube கணக்கில் வைரலாகும் காணொளியை பிப்ரவரி 19, 2025 அன்று வெளியிட்டுள்ளது. அந்த காணொளியின் தலைப்பாக ‘ த.வெ.க அலுவலகம் இடிப்பு: த.வெ.க மாவட்ட அலுவலகம் இடிப்பு | த.வெ.க விஜய் | திருவள்ளூர் | பதியால் பேட்டை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் தளத்திலும் இதே செய்தி வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் விஜய் கட்சியின் அலுவலகம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் பிப்ரவரி 18,2025 அன்று இடிக்கப்பட்டது என குமுதம் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆகையால், நடிகர் விஜய் இப்தார் விருந்தில் கலந்து கொண்டதற்கு அலுவலகம் இடிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது புலனாகிறது.
ஆனால் விஜய் நடத்திய இப்தார் விருந்து மார்ச் 7 அன்று நடைபெற்றது. முடிவாக இந்த ஒரு சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், பரவும் காணொளி தவறானது என்பதும் நிரூபணமாகிறது.