“பெங்களுர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்”, “உத்திர பிரதேச மாநிலத்தில் வாழும் இவரின் வயது 188 என்கிறார்களே... உங்கள் கருத்து” என்ற பல்வேறு கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வயது முதிர்ந்த உடல் மெலிந்த முதியவர் ஒருவரை இருவர் கைபிடித்து கூட்டிச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதில், இருக்கும் முதியவருக்கு வயது 188 என்று கூறி இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் அந்த முதியவரின் வயது சுமார் 110 என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜுலை 2ஆம் தேதி இவர் குறித்து NavBharat Times செய்தி வெளியிட்டிருந்தது.
NavBharat வெளியிட்டுள்ள செய்தி
அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் வசிப்பவர் சியாராம் பாபா. இவரது உண்மையான வயது யாருக்கும் தெரியாது, ஆனால் அவருக்கு 109 அல்லது 110 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாபா சியாராம் தனது பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ. 10 மட்டுமே பெற்றுக்கொள்கிறார்.
கடும் குளிராக இருந்தாலும், கனமழையாக இருந்தாலும் சரி, இவர் இடுப்பில் ஒரு துணி மட்டுமே கட்டி இருப்பார் என்று கூறப்படுகிறது. தியானத்தின் மூலம், அவர் தனது உடலை வானிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டார். இந்த வயதிலும் தன் எல்லா வேலைகளையும் தானே செய்து கொண்டு, தானே சமைத்து சாப்பிடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Satya Agrah என்ற இணையதளத்திலும் சியாராம் பாபா வயது சுமார் 110 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக 188 வயது முதியவர் என்று கூறி வைரலாகும் காணொலியில் இருக்கும் முதியவரின் வயது சுமார் 110 என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அவர் பெங்களூரோ அல்லது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரோ அல்ல மாறாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்.