Fact Check: மாநாட்டில் நடிகர் விஜய் தங்குவதற்காக ரூபாய் 100 கோடி மதிப்பிலான சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டதா?

மதுரை தவெக மாநாட்டில் நடிகர் விஜய் தங்குவதற்காக ரூபாய் 100 கோடி மதிப்பிலான சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டதாக கேரவன் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 22 Aug 2025 2:50 PM IST

Fact Check: மாநாட்டில் நடிகர் விஜய் தங்குவதற்காக ரூபாய் 100 கோடி மதிப்பிலான சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டதா?
Claim:நடிகர் விஜய் தங்குவதற்காக, மதுரை தவெக மாநாட்டிற்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டதாக ஒரு கேரவனின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது‌‌. உண்மையில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது மலையாள நடிகர் பிரித்திவிராஜிற்கு சொந்தமான கேரவன்

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தியில் நேற்று (ஆகஸ்ட் 21) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், “மாநாட்டில் விஜய் தங்குவதற்கு 100 கோடி செலவில் வர வரவழைக்க பட்ட அதிநவீன சொகுசு வாகனம்” என்ற தகவலுடன் கேரவன் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் புகைப்படத்தில் உள்ள கேரவன் மலையாள நடிகர் பிருத்திவிராஜிற்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது Team BHP என்ற இணையதளத்தில் வைரலாகும் அதே புகைப்படத்தை பதிவிட்டு இது மலையாள நடிகர் பிரிதிவிராஜிற்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.


Team BHP இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

தொடர்ந்து தேடுகையில் Ojes Automobiles என்ற கேரவன் தயாரிப்பு நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, “#throwback #2012 #2010model Prithvi's 1st Ojes caravan 🚐 Ojes Automobiles” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் கேரவனுடன் நடிகர் பிரித்விராஜ் இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதனைக் கொண்டு வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் கேரவன் மலையாள நடிகர் பிரித்திவிராஜிற்கு சொந்தமானது என்பதை நம்மால் கூற முடிகிறது.


மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக 2012ஆம் ஆண்டே நடிகர் பிரித்திவிராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கக்கூடிய கேரவனை பதிவிட்டுள்ளார்.

Conclusion:

முடிவாக நம் தேடலில் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டில் விஜய் தங்குவதற்கு வரவழைக்கப்பட்ட ரூபாய் 100 கோடி மதிப்பிலான அதிநவீன சொகுசு வாகனம் என்று வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது மலையாள நடிகர் பிரித்திவிராஜிற்கு சொந்தமான கேரவன் என்று தெரியவந்தது.

Claim Review:சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு கேரவன் புகைப்படம், நடிகர் விஜய் மதுரை தவெக மாநாட்டில் பயன்படுத்த 100 கோடி மதிப்புள்ள சொகுசு வாகனம் வரவழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. உண்மையில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது மலையாள நடிகர் பிரித்திவிராஜிற்கு சொந்தமான கேரவன்
Next Story