"உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம். யோகிடா." என்ற கேப்ஷனுடன் உத்திரப்பிரதேசத்தில் பாலம் ஒன்று திறக்கப்பட உள்ளதாக பிரமாண்ட மேம்பாலத்தின் புகைப்படத்தை வலதுசாரியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் புகைப்படம்
Fact-check:
அப்புகைப்பட்டத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அந்த மேம்பாலம் சீனாவின் குயிசூ(Guizhou) மாகாணத்தில் உள்ள Qianchun Interchange (சியான்சன் இன்டர்சேன்ஜ்) என்பது தெரியவந்தது. மேலும், ஆய்வாளர் மற்றும் ஆசிரியரான எம்.எஃப். கான் தனது டுவிட்டர் பக்கத்தில், "சியான்சன் இன்டர்சேன்ஜ் சீனாவின் மிகவும் சிக்கலான இன்டர்சேன்ஜ்களில் ஒன்று. 8 வெவ்வேறு திசைகளில் ஐந்து அடுக்குகளில் அடுக்கப்பட்ட 11 வளைவுகளைக் கொண்டுள்ளது. அதன் மிகப்பெரிய செங்குத்து வீழ்ச்சியான 55 மீட்டர், இன்டர்சேன்ஜ் சூப்பர் "ரோலர் கோஸ்டர்" என அழைக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்தும் விதமாக, குளோபல் டைம்ஸ் என்ற சீன செய்தி நிறுவனம், இந்த இன்டர்சேன்ஜ்ஜின் ஏரியல் வியூ புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதே போன்று கராச்சிக்கான சீன தூதர் லிபிஜியான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சியான்சன் இன்டர்சேன்ஜ்ஜின் இரவு நேர ஏரியல் வியூ காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும், இதனை உறுதிப்படுத்துவதற்காக கூகுள் மேப்பில் சியான்சன் இன்டர்சேன்ஜ் குறித்து தேடினோம். அப்போது, தற்போது வைரலாகும் அதே புகைப்படம் இருந்தது தெரியவந்தது.
கூகுள் மேப்பில் சியான்சன் இன்டர்சேன்ஜ்
Conclusion
நமது தேடலின் மூலம், உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம் என்று வலதுசாரியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வரும் புகைப்படம் சீனாவின் சியான்சன் இன்டர்சேன்ஜ்ஜின் புகைப்படம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.