பிரதமர் மோடி தலைக்கு மேல் இருந்த கடிகாரம் 04:20 என்று நேரம் காட்டியதா?

பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது தலைக்கு மேல் இருந்த கடிகாரத்தில் 04:20 என்று நேரம் காட்டியதாக புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது

By Ahamed Ali  Published on  20 Dec 2022 9:09 AM GMT
பிரதமர் மோடி தலைக்கு மேல் இருந்த கடிகாரம் 04:20 என்று நேரம் காட்டியதா?

இந்தியப் பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக பிரதமரின் தலைக்கு மேல் உள்ள கடிகாரத்தில் 04:20 என்ற நேரம் காட்டுவது போன்று புகைப்படம் உள்ளது.


வைரலாகும் புகைப்படம்

Fact-check:

ஏமாற்றுதல், போர்ஜரி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420-ன் படி வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில், கடிகாரத்தில் 04:20 என்ற நேரத்தை காட்டுவதன் மூலம் பிரதமரை ஏமாற்றுபவர் போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

இதனையடுத்து, இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தி இந்து வெளியிட்டிருந்த செய்தியில் பிரதமர் மோடி நள்ளிரவில் பனராஸ் ரயில் நிலையத்தை பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தற்போது வைரலாகும் அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், கடிகாரத்தில் நேரம் 01:13 என்று உள்ளது.

இதே புகைப்படத்துடன் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டிவி உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதிலும், நேரம் 01:13 என்றே உள்ளது.

Conclusion:

இறுதியாக, நமக்கு கிடைத்திருக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் மோடி தலைக்கு மேல் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் 04:20 எனக் காண்பித்ததாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:A photo is being shared showing PM Modi standing at a railway station with the clock above his head reading 04:20
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story