உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி: ஜாகிர் நாயக் உரையைக் கேட்ட 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனரா?

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜாகிர் நாயக்கின் உரையைக் கேட்ட நான்கு பேர் இஸ்லாத்தை தழுவியதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

By Ahamed Ali  Published on  24 Nov 2022 6:52 PM GMT
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி: ஜாகிர் நாயக் உரையைக் கேட்ட 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனரா?

"FIFA உலகக் கோப்பை ஆரம்ப நிகழ்வில் ஜாகிர் நாயக்கின் உரையை கேட்ட 4 பேர் இஸ்லாத்தை தழுவினர்..!" என்ற கேப்ஃஷனுடன் ஜாகிர் நாயக் முன்பாக நான்கு பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது போன்ற 30 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை இஸ்லாமியர்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


வைரலாகும் காணொலி

Fact-check:

இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2016-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி ஜாபர் அல்ஹர்மி என்பவர் அக்காணொலியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "கடாராவில் டாக்டர். ஜாகிர் நாயக்கின் விரியுரையைக் கேட்ட பிறகு 4 பேர் இஸ்லாத்திற்கு மாறினார்(அரபு மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.


அல்ஜசீரா முபஷ்ஷிர்

மேலும், 2 நிமிடம் 36 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை அல்ஜசீரா செய்தி நிறுவனம் அல்ஜசீரா முபஷ்ஷிர் (Al-Jazeera Mubasher) என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. இதே காணொலியை அதன் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களிலும் பதிவேற்றி உள்ளது‌. அல்ஜசீரா பதிவிட்டுள்ள காணொலியில் தற்போது வைரலாகும் அதே நிகழ்வு இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிகிறது.

Conclusion:

நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜாகிர் நாயக்கின் உரையைக் கேட்ட 4 பேர் இஸ்லாத்தை தழுவினர் என்று வைரலாகும் காணொலி 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இது வதந்தி என்பதால் மேலும், இக்காணொலியை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Claim Review:A video claims four people accepting Islam after listening to Zakir Naik's speech at the opening ceremony of the FIFA World Cup in Qatar went viral.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Next Story