சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீட்டில் பள்ளிச் சீருடையில் இருக்கும் இரண்டு சிறுமிகளை அடித்துத் துன்புறுத்தும்
காணொலி பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது. சிலர் இச்சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது என்றும் பதிவு செய்து வந்தனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இந்நிலையில், பரவி வரும் காணொலி குறித்த உண்மை தன்மையைக் கண்டறிவதற்காக காணொலியின் ஒரு குறிப்பிட்ட காட்சியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, ஆந்திர மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டான பிரஜசக்தியில், "சித்தூர் பகுதியில் இரண்டு சிறுமிகளை ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது" என்றும், "காணொலியில் இருப்பவர் யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்ததாகத் தெரிகிறது. இரண்டு சிறுமிகள் கண்மூடித்தனமாக தாக்கப்படுவதை அந்த காணொலியில் காண முடிகிறது. இந்த காணொலியை பார்த்த நெட்டிசன்கள் உளவுத்துறையும், அரசும் அந்த நபரை அடையாளம் கண்டு, கடுமையாக தண்டித்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்" என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இச்சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது இல்லை என்பதைக் கூற முடிகிறது.
தமிழக காவல்துறை விளக்கம்
மேலும், சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக தேடினோம். அப்போது, தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில், "இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. சமூக வளைதளங்களில் பரவி வரும் இந்த காணொலி ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில்" நடைபெற்றது என்றும், "ஆந்திர மாநிலம் பெண்டபாடு அடுத்த வீரபாளையத்தைச் சேர்ந்த தாவீது துபாயில் இருக்கும் தன் மனைவியை வரவழைக்க மகள்களை அடித்து துன்புறுத்திய பதிவு. தாவீதை காவல்துறையினர் கைது செய்தனர்" என்று விளக்கமாக பதிவிட்டு. இச்செய்தி வெளியான பேப்பர் கட்டிங்கையும் பதிவில் இணைத்துள்ளனர்.
Conclusion:
இவற்றின் மூலம் பரவி வரும் காணொலியில் நடந்த சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை என்றும், அது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிகிறது. மேலும், இது தமிழகத்தில் நடைபெற்றது என்று தவறாகப் பகிரப்பட்டு வருவதை நம்மால் அறிய முடிகிறது.