“உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்க முயற்சிக்கும் போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதை புதைக்கும் காட்சி” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அகோரிகள் சிலர் சிறுவனை உயிருடன் நெருப்பில் போட முயற்சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, KRB YT VLOG என்ற பேஸ்புக் பக்கத்தில் இதே காணொலி ரீல்ஸாக பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் இதுபோன்று பல்வேறு காணொலிகளை பதிவிட்டு இருந்தனர். அமானுஷ்யம் தொடர்பான பல்வேறு காணொலிகளையும் பதிவிட்டு இருந்தனர்.
தொடர்ந்து தேடுகையில், Haunted Guru Ji என்ற யூடியூப் சேனலில் இதன் முழு நீள காணொலி கடந்த ஜனவரி 24ஆம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், காணொலியின் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “இது முழுக்க பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட காட்சிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இதே போன்று பல்வேறு அமானுஷ்யம் தொடர்பான காணொலிகளை பொழுதுபோக்கிற்காக காட்சிப்படுத்தி யூடியூபில் பதிவேற்றுகின்றனர் என்பதையும் நம்மால் காண முடிந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக உத்தரப் பிரதேச அகோரிகள் சிறுவன் ஒருவனை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.