விமான பயணத்தின் போது தேநீர் கேட்ட பயணி ஒருவருக்கு விமானப் பணிப்பெண் காபி வழங்கியதாகவும், இதனால் கோபமடைந்த அப்பயணி கூச்சல் இடுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது உண்மையில் நடைபெற்ற சம்பவம் என்பது போன்று பரப்பப்படுகிறது.
அதன் டிஷ்க்கிரிப்ஷன் பகுதியில், “இந்த எடுத்துக்காட்டுக் காணொலியில், வயதான பயணி ஒருவர் தேநீர் கேட்டார். ஆனால், அவருக்கு காபி வழங்கப்பட்டது, இதனால் ஆத்திரமடைந்த அவர் கூச்சலிட்டார். சவாலான தருணங்களில், கேபின் குழுவினர் பொறுமையாக இருக்க வேண்டும். கேபின் குழு உறுப்பினர்களாக ஆக விரும்பும் நபர்கள் பொறுமையாக இருப்பது அவசியம்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வைரலாகும் காணொலியில் இருக்கும் முதியவர் நடித்துள்ள பல்வேறு காணொலிகளும் அதே யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கேபின் குழு உறுப்பினர்களின் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்றும் டிஷ்க்கிரிப்ஷன் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக விமானத்தில் தேநீர் கேட்ட பயணிக்கு காபி வழங்கப்பட்டதற்காக கோபமடைந்த பயணி கூச்சலிட்டதாக வைரலாகும் காணொலி உண்மையில் கேபின் குழு உறுப்பினர்களின் பயிற்சியின்போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.