Fact Check: ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி அணிந்திருந்த தங்க ஆடை? உண்மை என்ன?

ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சண்ட் தங்க ஆடை அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  4 Jun 2024 7:02 PM GMT
Fact Check: ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி அணிந்திருந்த தங்க ஆடை? உண்மை என்ன?
Claim: அம்பானியின் மகன் மற்றும் மருமகள் தங்க ஆடை அணிந்திருக்கின்றனர்
Fact: வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

“தங்கத்திலேயே செய்த டிரஸ்ஸாம். அம்பானி மகன் & மருமகள்” என்ற கேப்ஷனுடன் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சண்ட் ஆகியோர் தங்க ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் புகைப்படம்

Fact-check:

இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “Beauty of AI” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் புகைப்படத்தை ஆனந்த அம்பானி என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது. இதனைக் கொண்டு இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று கூற முடிகிறது.

தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை Hugging face மற்றும் Hive moderation ஆகிய தளங்களில் பதிவேற்றி AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் தானா என்பதை ஆய்வு செய்ததில் இரண்டு தளங்களும் அப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்ற முடிவைத் தந்தன.


AI ஆய்வு முடிவுகள்

மேலும், வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் இருவரது முகமும் இந்தியா டுடே வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் இருவரது முகமும் ஒன்றாக இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதன் மூலம் இந்தியா டுடே வெளியிட்டுள்ள புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை கூற முடிகிறது.


இந்தியா டுடே வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வைரலாகும் புகைப்படம்

Conclusion:

நம் தேடலின் முடிவாக ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சண்ட் தங்க ஆடை அணிந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:அம்பானியின் மகன் மற்றும் மருமகள் தங்க ஆடை அணிந்திருப்பதாக வைரலாகும் புகைப்படம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
Next Story