“வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லையென்றால் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையைப் பயன்படுத்துங்கள், வீட்டில் நம் சகோதரிகள் பொருட்கள் வாங்குவதென்றால் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை கிழித்து பொட்டலம் கட்டுங்கள்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மார்ச் 24ஆம் தேதி ஏபிபி நாடு தனது யூடியூப் சேனலில் ஷார்ட்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் செய்தியாளர்களிடம் பேசும் அண்ணாமலை, “வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லை என்றால் திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள்.
வீட்டில் நம் சகோதரிகள் பொருட்கள் வாங்குவதென்றால் திமுக தேர்தல் அறிக்கையை கிழித்து பொட்டலம் கட்டுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வைத்து சவால் விட்டுக் கொண்டிருக்கிறேன்…” என்று திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்துவிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை பெருமையாகப் பேசுகிறார்.
இதில் திமுகவின் தேர்தல் அறிக்கை என்ற இடத்தில் அவர் பேசும் பாஜகவின் தேர்தல் அறிக்கை என்ற வார்த்தையை வைத்து எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது. மேலும், இதன் முழு நீளக் காணொலியை ஏபிபி நாடு, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அதிலும், திமுக தேர்தல் அறிக்கையை டாய்லெட் பேப்பர் என்று அண்ணாமலை விமர்சிக்கிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திமுக தேர்தல் அறிக்கையை டாய்லெட் பேப்பர் என்று அண்ணாமலை விமர்சிக்கும் காணொலியை எடிட் செய்து “பாஜகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர்” என்பது போன்று பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.