Fact Check: இரண்டு இறக்கைகளுடன் குழந்தை பிறந்ததா? உண்மை என்ன?

குழந்தை ஒன்று இரண்டு இறக்கைகளுடன் பிறந்துள்ளது என்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  8 July 2024 9:49 AM GMT
Fact Check: இரண்டு இறக்கைகளுடன் குழந்தை பிறந்ததா? உண்மை என்ன?
Claim: இரண்டு இறக்கைகளுடன் பிறந்துள்ள குழந்தை
Fact: வைரலாகும் காணொலியில் இருப்பது பிரன்ச் மொழி திரைப்படமான Rickyல் இடம்பெற்றுள்ள காட்சிகள்

“இரண்டு இறக்கைகளுடன் பிறந்து பறவை போல குழந்தை பறப்பது உலகிலேயே இதுதான் முதல் நிகழ்வு என்று நினைக்கிறேன்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பிறந்த குழந்தையின் முதுகுப் பகுதியில் இறக்கை முழைத்து பறப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact-check:

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, WeExplainAll என்ற யூடியூப் சேனலில் 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, “இறக்கை கொண்ட குழந்தை; Ricky(2009) திரைப்படத்தின் விளக்கம்” என்ற தலைப்புடன் காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதில், Ricky என்ற திரைப்படம் குறித்து விளக்கியுள்ளனர்.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு தேடுகையில், வைரலாகும் காணொலி 2009ஆம் ஆண்டு வெளியான பிரன்ச் மொழி திரைப்படமான Ricky என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் என்பது தெரியவந்தது. இத்திரைப்படம் பிரான்சுவா ஓசோன் என்ற பிரன்ச் திரைப்பட இயக்குனர் இயக்கிய Ricky என்ற இறக்கையுடன் பிறந்த குழந்தையை மையப்படுத்திய திரைப்படம் என்பது தெரியவந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை விளக்கி பல்வேறு யூடியூப் காணொலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக இரண்டு இறக்கைகளுடன் பிறந்த பறவை போன்ற குழந்தை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மை இல்லை என்றும் அது பிரன்ச் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது

Claim Review:இரண்டு இறக்கைகள் குழந்தை பிறந்துள்ளது என்று வைரலாகும் காணொலி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:வைரலாகும் காணொலியில் இருப்பது பிரன்ச் மொழி திரைப்படமான Rickyல் இடம்பெற்றுள்ள காட்சிகள்
Next Story