"உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கியினுள் குண்டு இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார் என்றால் சுட்டுத் தள்ளிவிட்டு வந்து கொண்டே இருங்கள் மிச்சத்தை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் 11 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலி குறித்து யூடியூபில் தேடினோம். அப்போது, The News Minute கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அண்ணாமலை பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் 0:32 முதல் 0:55 வரையிலான பகுதியில் பேசும் அண்ணாமலை, "பார்டரில் இருக்கக்கூடிய ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் கூட இங்கிருந்து உரக்கமாக ஒரு செய்தியைச் சொல்லிக் கொள்கிறோம். அரசு உங்களுடன் இல்லையென்றாலும் நாங்கள் உங்களோடு இருப்போம்.
உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கியினுள் குண்டு இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார் என்றால் சுட்டுத் தள்ளிவிட்டு வந்து கொண்டே இருங்கள் மிச்சத்தை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும்…” என்றார்.
The News Minute வெளியிட்டுள்ள காணொலி
தொடர்ந்து, இது குறித்து தேடியபோது, கிருஷ்ணகிரியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் அண்ணாமலை பேசிய உரை இது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக "ராணுவ வீரர் மரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம்" என்ற தலைப்பில் தந்தி டிவி போராட்டம் தொடர்பான முழு நீள நேரலைக் காணொலியை வெளியிட்டுள்ளது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் பணியாற்றும் போது சுட்டுத் தள்ளுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய காணொலியே வைரலாகி வருகிறது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.