“CSI திருச்சபை பெங்களூர் ஆராதனை நடைபெறும் போது BJP கட்சி பிரமுகர் ஆயர் அவர்களை மைக்கை பிடுங்கி தலையில் அடிக்கும் காட்சி. இவர்களின் அராஜகங்களுக்கு இந்த தேர்தலில் நல்ல முடிவு மக்கள் எடுக்க வேண்டும்” என்ற கேப்ஷனுடன் சர்ச் பாதிரியார் ஒருவரை மற்றொருவர் தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே காணொலியை சிலர் கன்னியாகுமரியில் நடைபெற்ற சம்பவம் என்று பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Tokuho என்ற யூடியூப் சேனலில் 2018ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்பது தெரியவருகிறது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தேடுகையில், TV9 Telugu(Archive) 2018ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி எக்ஸ் தளத்தில், “தெலங்கானாவின் பத்ராத்திரி என்ற பகுதியில் உள்ள கொத்தகுடத்தைச் சேர்ந்த சர்ச் பாதிரியார் மீது கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்தினர்” என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம் சம்பவத்தில் தொடர்புடைய இருவருமே கிறிஸ்தவர்கள் என்பதும் தெரியவருகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சர்ச் பாதிரியாரை தாக்கிய பாஜகவினர் என்றும் இச்சம்பவம் பெங்களூர் மற்றும் கன்னியாகுமரியில் நடைபெற்றதாக பகிரப்படும் தகவல் உண்மை இல்லை. உண்மையில் அது தெலங்கானாவில் நடைபெற்றது என்றும் அதில் இருப்பவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.