"சேலம் ஆத்தூர் அருகே கும்பலாக கார்களில் வந்து ஆடு திருடிய கரூர் மாவட்ட பாஜகவினர். பொதுமக்கள் பிடித்து அடிக்க துவங்கியதும் ”பாரத் மாதா கீ ஜே" என்று கோஷம் போட்டதால் பரபரப்பு" என்று நேற்றைய(ஜூன் 25) தேதியில் தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும், ஜூன் 25ம் தேதி வெளியான தந்தி டிவியின் நியூஸ் கார்டுகளை தேடுகையில், "சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல். ஆடு திருடிய 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி" என்று தற்போது வைரலாகும் அதே புகைப்படத்துடன் நியூஸ் கார்ட் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வைரலாகும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவருகிறது.
தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று(ஜூன் 26), "Fake Alert: இப்படி எதையும் தந்தி டிவி வெளியிடவில்லை" என்று ஏற்கனவே வைரலாகும் புகைப்படத்துடன் தந்தி டிவி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில விளக்கமளித்துள்ளது.
தந்தி டிவியின் போலி நியூஸ் கார்ட் விளக்கம்
Conclusion:
இறுதியாக, வைரலாகும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்றும் அதில் உள்ள செய்தியில் உண்மையில்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.