"இன்று மக்காவில், ஒரு மின்னல்.... வந்த லட்சக்கணக்கான மக்கள் மீதும் விழுந்தது. மழை நின்ற ஒரு நிமிடத்தில், பூமிக்கு அடியில் இருந்து லட்சக்கணக்கான கரப்பான் பூச்சிகள் வெளியே வந்ததால், தொழுகையை நிறுத்திவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர்" என்ற தகவலுடன் 1 நிமிடம் 11 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இந்நிலையில், இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, "மக்கா மசூதியில் வெட்டுக்கிளிகளின் திடீர் தோற்றத்தை நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்" என்ற தலைப்பில் சவுதி கெஜட் 2019ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், " மஸ்ஜிதுல் ஹராமில் திடீரென்று தோன்றிய Black Grasshopper மற்றும் இதர பூச்சிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மக்கா நகராட்சியைச் சேர்ந்த சிறப்பு குழுவினர் மஸ்ஜிதுல் ஹராமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மக்கா மற்றும் மதீனாவின் புனித மசூதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளவதற்கான அதிகாரி ஃபஹத் அல்-மல்கி, திடீரென இரவு நேரத்தில் இப்பூச்சிகள் படையெடுக்க துவங்கின. பணியாளர்களின் சீரிய முயற்சியால் பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இவற்றால் அங்கிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்".
இதேபோன்று அதே ஆண்டு ஜனவரி 11ம் தேதி நியூஸ் வீக் வெளியிட்டுள்ள செய்தியில், "இப்படியான பூச்சிகளின் படையெடுப்பு என்பது சமீபத்திய மழையுடன் தொடர்புடைய ஒரு இயற்கை நிகழ்வாகும் என்று கிங் சவுத் பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் வேளாண் அறிவியல் துறையின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறையின் தலைவர் ஹசல் பின் முஹம்மத் அல் ஜாஃபர் தெரிவித்துள்ளார்". இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, இப்பூச்சிகளை அழிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் மக்கா நகராட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.
மக்கா நகராட்சியின் டுவிட்டர் பதிவு
Conclusion:
பூமிக்கு அடியில் இருந்து லட்சக்கணக்கான கரப்பான்பூச்சிகள் தோன்றியதாக பரவும் செய்தியில் உண்மையில்லை, அவை அனைத்தும் Black Grasshopper எனும் வகை பூச்சி, சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக இவை தோன்றி இருக்கலாம் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.