"#அனைத்து போராளிகளையும் இறைவன்பொருந்திக் கொள்வானாக..... #ஆமீன்....." என்ற கேப்ஷனுடன் இஸ்ரேலுடனான போரில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் படையினரின் உடலுக்கு முன்பாக பிரார்த்தனையில் ஈடுபடுவது போன்ற காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது pubapibali என்ற எக்ஸ் பக்கத்தில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இது பழைய காணொலி என்று உறுதியாகிறது. தொடர்ந்து, பதிவில் எழுதப்பட்டிருந்த சாவக(Javanese) மொழி வார்த்தைகளைக்கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம்.
pubapibali எக்ஸ் பதிவு
அப்போது, Balitribune என்ற இந்தோனேசிய ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, "இந்தோனேசிய இளைஞர் தேசியக் கமிட்டி மற்றும் இரு அமைப்புக்கள் இணைந்து கோலோ நரங்(Calonarang) எனப்படும் இந்தோனேசிய நாட்டுப்புறவியல் நிகழ்வை நடத்தி உள்ளனர். இந்த நிகழ்வில் 108 பேர் பங்கேற்று இறந்தவர்களைப் போன்று நடித்துள்ளனர். 2022ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கெடுட் மரியா கலைக் கட்டிடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக Bali Klasik Channel New என்ற யூடியூப் சேனலில் இந்நிகழ்வின் முழு நீளக் காணொலி வெளியிடப்பட்டுள்ளது.
முழு நீளக் காணொலி
Conclusion:
நம் தேடலின் முடிவாக உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் படையினரின் உடல்கள் என்று பகிரப்படும் காணொலி தவறானது என்றும் அது உண்மையில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.