Fact Check: கொலையுண்ட கொல்கத்தா மருத்துவரின் உடலை அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து வெளியே எடுத்துச் சென்றாரா?

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலையுண்ட கொல்கத்தா மருத்துவரின் உடலை அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து வெளியே எடுத்துச் செல்வதாக வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on  5 Sept 2024 6:21 PM IST
Fact Check: கொலையுண்ட கொல்கத்தா மருத்துவரின் உடலை அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து வெளியே எடுத்துச் சென்றாரா?
Claim: கொலையுண்ட கொல்கத்தா மருத்துவரின் உடலைக் கொண்டு செல்லும் அவரது தந்தை
Fact: தகவல் தவறானது, உண்மையில் அது விபத்தில் உயிரிழந்த விபின் மேத்தா என்பவரின் உடல்

கொல்கத்தாவில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இறந்த மருத்துவரின் உடலை அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வருவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, News 18 Hindi ஊடகம் கடந்த ஜூன் 2ஆம் தேதி வைரலாகும் காணொலியுடன் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், “ஜாலோர் ஃபதே ராயல் காலனியில் வசிக்கு விபின் மேத்தா, விசாகப்பட்டினத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து விபினின் தந்தை பிரவீன் மேத்தா தனது மகனின் உடலை தானம் செய்தார். தந்தையின் முடிவிற்குப் பிறகு, விபினுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் 300 ஊழியர்கள் விபின் மேத்தாவின் உடலுக்கு மரியாதை செலுத்தி, உடலை தானத்திற்காக மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர்.

ஜலோரின் ஃபதே ராயல் ரெசிடென்ட் காலனியில் வசிக்கும் பிரவீன் மேத்தா, விசாகப்பட்டினத்தில் அழகுசாதனப் பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார் என்று ஜாலோரில் வசிப்பவர் தெரிவித்தார். பிரவீன் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் அங்கு தங்கி, தொழிலை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரரான சுரேஷ் காந்தி கூறியதாவது: மே 29 அன்று மாலை, கடையை மூடிவிட்டு விபின் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், சாலை விபத்தில் விபினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின், ஜூன் 1ம் தேதி சனிக்கிழமை காலை, விபின் உயிரிழந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Dainik Bhaskar ஊடகமும் வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலையுண்ட கொல்கத்தா மருத்துவரின் உடலை அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து வெளியே எடுத்து வருவதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அது விபத்தில் உயிரிழந்த விபின் மேத்தா என்பவருடைய உடல் தானத்திற்காக மருத்துவமனையில் இருந்து அவரது தந்தையால் எடுத்துச் செல்லப்படும் காட்சிகள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் உடலை எடுத்துச் செல்லும் அவரை தந்தை
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:தகவல் தவறானது, உண்மையில் அது விபத்தில் உயிரிழந்த விபின் மேத்தா என்பவரின் உடல்
Next Story