“பங்களாதேஷ்-ல் அரிவாள் எடுத்து ஓட ஓட விரட்டு பங்களாதேஷ் இந்து வீர மங்கை தங்களை பாதுகாத்துக்கொள் இது போன்ற வீர வேலுநாச்சியார்கள் உருவாக வாழ்த்துகள்” என்ற கேப்ஷனுடன் பெண் ஒருவர் அரிவாளுடன் ஆண் ஒருவரை துரத்துவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை இந்து பெண் வீரமாக வங்கதேச போராட்டக்காரர்களை அரிவாளுடன் விரட்டுவது போன்று பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் இக்காணொலி 2022ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவி வருவது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி MD Zidan Musa என்ற பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
தொடர்ந்து தேடியதில் 2022ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் 2022ஆம் ஆண்டு Rakib Hossen Forazi என்ற பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “இக்காணொலியைப் பார்த்த சிறிது நேரத்தில் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சிறிய முயற்சியும் போய்விட்டது” என்று வங்காள மொழியில் கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், இச்சம்பவம் எங்கு நடைபெற்றது அதன் பின்னணி என்ன என்பது போன்ற விவரங்கள் இல்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவில் வங்கதேச போராட்டக்காரர்களை அரிவாளுடன் விரட்டும் வீர இந்து பெண் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2022ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள பழைய காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.